"முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இரண்டாவது கட்டமாக போலீசார், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட, 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
மூன்றாவது கட்டமாக, 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும், ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
"முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் #India | #CoronaVaccine | #HealthWorkers | #HealthMinister | #MinisterHarshVardhan https://t.co/rQsprTAxNv
— Polimer News (@polimernews) December 5, 2020
Comments